(அமெரிக்க சிந்தனையாளர் எமர்சன் (Ralph Waldo Emerson) எழுதிய Self Reliance என்ற கட்டுரையின்மொழிபெயர்ப்பு.)
ஒரு சிறந்த ஓவியர் எழுதிய சில கவிதைகளை வாசித்தேன்.
மரபானவையாக இல்லையென்றாலும் அவை இயல்பான ,முழுமையான
படைப்பாக இருந்தன. அதன்பேசுபொருள் எதுவாக இருந்தாலும் அப்படிப்பட்ட முழுமைகளை நமது மனம் எப்படியும் கண்டறிந்துவிடுகிறது. அப்படைப்பின் கருத்துக்களை விட அதுஉணர்த்தும் எண்ணமே முக்கியமானது. மேதமை என்பது தனது சொந்த எண்ணங்களை நம்புவதும்,நல்லது என தன்மனம் உணரும் உண்மைகள் மற்றவருக்கும் உண்மையாகும் என எண்ணுவதுமாகும். எவ்வளவுசிறியதானாலும் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்.காலப்போக்கில் அவைபிரபஞ்ச உண்மையாகலாம்.உள்ளுக்குள் உள்ளாக இருப்பதே பின்னர் வெளிக்கும் வெளியாகஇருக்கிறது எனவே நமக்குள் தோன்றும் எண்ணம், அதன் இறுதி விளைவுகளை வைத்தேதீர்மானிக்கப்படுகிறது. தனது உள்ளுணர்வின் குரலுக்கு செவிசாய்ப்பது மிகச் சிறந்தபண்பாகும். மோசஸ்,பிளேட்டோ,மில்டன் போன்றஆளுமைகள் செய்ததும இதுவே. அவர்கள் தங்களுக்கு சரியென்று தோன்றியதைக் கூறினார்களேஒழிய பரம்பரையாக நூல்களில் உள்ளவற்றையோ,முன்னோர் கூறியவற்றையோ அல்ல. வெளி வெளிச்சங்களை விட தன் மனத்தில் பிரதிபலிக்கும்உள்ளொளியைக் கண்டடைய ஒருவன் பயில வேண்டும். ஆனால் அவன் தன்னுடையது என்பதற்காகவேஅவற்றை கவனிப்பதில்லை. ஒவ்வொரு மேதையிலும் நாம் நம்முடைய நிராகரிக்கப்பட்டஎண்ணங்களைக் காண்கிறோம். அவை ஒரு செயற்கையான மேன்மையுடன் நம்மிடமேவருகின்றன.பெரும் படைப்புகள் சொல்வதும் இதையே. அவை வெளிக் கூச்சல்களுக்குப் பதில்நம்முடைய கண்டடைதல்களுக்கு முக்கியத்துவம் தரச் சொல்கின்றன. இல்லையேல் நாளைவேறொருவர் நாம் எண்ணிய அதே கருத்துக்களை உறுதியாக முன்வைக்கையில் அதைகுற்ற உணர்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியிருக்காது.
பொறாமைஒரு முட்டாள்தனம்,நகலெடுத்தல் தற்கொலைக்கு ஒப்பானது என்பதை ஒவ்வொரு மனிதனும் ஒரு கட்டத்தில் கற்றுக்கொள்கிறான். மேலும், தனதுமுன்னேற்றமோ பின்னடைவோ தன்னையே சார்ந்தது எனவும், நன்மையால்சூழப்பட்ட இப்பிரபஞ்சத்திலும், தனக்குரியது கடும் உழைப்பின் மூலம் மட்டுமேஅடையக்கூடியது என்பதையும் அவன் அறிகிறான். அவனிடமுள்ள தனித்தன்மையானஆற்றலானது இயற்கையில் புதியது. அதன் சாத்தியங்களை அவன் அவ்வாற்றலை பயன்படுத்தும்போது தான் அறிய முடியும். சில எண்ணம், செயல் மற்றும் காட்சிகளால் அவன்பாதிக்கப் படுகிறான் மற்றும் சிலவற்றால் அவன் பாதிக்கப் படுவதில்லை.இது தற்செயலல்ல. ஆனால் நாம் அந்தகொடையால் வெட்கப்பட்டவர்கள் அவற்றை முழுவதும் வெளிப்படுத்துவதில்லை . என்னதான் காரணம் கருதினாலும்,கடவுள் கோழைகள் மூலம் தன்செயல்களை நிறைவேற்றுவதில்லை.மன அமைதியும் விடுதலையும் முழுமனதுடன் சிறப்பாகசெயல்புரியும் மனிதனுக்குத் தான்கிடைக்கிறது.ஆனால் இதற்கு மாறாக நடந்தால், அமைதியின்மையே கிடைக்கும். இதுசெய்யப்பட வேண்டியதை செய்யாமல் இருப்பதாகும்.இதில் அவன் மேதமை,உள்ளுணர்வு,நம்பிக்கை என அனைத்தையும் இழப்பான்.
தன்னம்பிக்கை.ஒவ்வொரு இதயமும் தன் துடிப்புகளில் இந்த உறுதியான
உண்மையையே சொல்கிறது. தெய்வீக விதி உனக்கு அளித்த இடம், உன்னைப்போன்றோரின் தொடர்புமற்றும் நிகழ்வுகளில் தொடர்புகளை ஏற்றுக்கொள்.சான்றோர்கள் செய்ததும் இதுவே.அவர்கள் தங்களின் மேதமை மீது குழந்தைத் தனமான நம்பிக்கை கொண்டிருந்தனர், தனதுஉள்ளார்ந்த பயங்களை வென்று செயல்புரிந்ததால் அவர்கள் எல்லாவற்றிலும் முன்னணியில்இருந்தனர். நாமும் தாழ்வு கற்பிக்காமல், அந்த உள்ளார்ந்த விதியினை நம்புவோம்,இருளிலும்குழப்பத்திலும் கலங்காது முன்னேர்வோர் வழிகாட்டிகளும்,மீட்பர்களும்,சான்றோர்கலுமேஒழிய கோழைகள் அல்ல.
இக்கட்டுரையிலும், குழந்தைகள்,சிறுவர்கள் ஏன்முரடர்களின் முகங்களிலும் தெரியும்இயற்கையான வசீகரத்தின் காரணம், பிளவுபட்ட கட்டற்ற , தவறான கணக்கீடுகள் காரணமானநம்பிக்கையற்ற மனம் அவர்களிடம் இல்லாததுதான். அவர்கள் முழுமையான மனத்தையும், வெல்ல முடியாத பார்வையையும் உடையவர்கள்.எனவேஅவர்களும் முகங்களைப் பார்த்தால்நாம் திருப்தியின்மையால் அசைக்கப்படுவோம் . குழந்தைத்தனம் விதிக்கப்படுவதில்லை மாறாக அனைவருக்கும் உரியது. எனவேதான் ஒரு குழந்தையால் நாலைந்து பெரியவர்களிடம் கொஞ்சி விளையாட முடிகிறது. கடவுள்பதின்பருவம் ,ஆண்மை இவையனைத்தும் அதன் உள்ளார்ந்த ஆர்வம் மற்றும் ஈர்ப்பால் அலங்கரிக்கப்பட்டிருக்குமாறு செய்துள்ளார்.இளையவர்களை குறைவாக எண்ணவேண்டாம்.அவர்களுக்கு தங்களுக்குள் தெளிவாகவும் உறுதியாகவும்
பேசிக்கொள்ள தெரியும் பின்னர் நம்மை மிக வயதானவர்களாக காட்டவும்தெரியும்.
இளையவர்களிடம் இருக்கும்அமைதி, கடவுளுக்குநிகரான திருப்தியின்மை மற்றும் கோபம் மற்றும் பொறாமையின் மீதான அலட்சியம் ஒருசிறந்த மனிதப் பண்பாகும். ஒரு சிறுவன், வீட்டிலும் வெளிடிலும் ஒரேமாதிரியாகத்தான் இருப்பான். கட்டற்ற,பொறுப்புகளற்ற அவன் தன்னுடைய இடத்திலிருந்தபடியே அனைத்தையும்,அனைத்து மனிதர்களையும் தனக்கேயுரிய குழந்தைத்தனத்துடன் நல்லது, கேட்டது, சலிப்பூட்டுவது,ஈர்ப்பூட்டுவது, சிறப்பானது, கீழானது எனசுதந்திரமாக, உண்மையாக மதிப்பிடுவான்.நீங்கள்அவனை கவனித்தாலும் அவன் உங்களை கவனிக்க மாட்டான். ஆனால் வளர்ந்த மனிதன் தன் 'விழிப்புணர்வால்' சிறைபடுத்தப்பட்டவன்.அவன்வளர்ததுமே தனது விருப்பு வெறுப்புகளால் பாதிக்கப்படுபவன்.இதற்க்கு தீர்வே இல்லை.அவன் தன் குழந்தைத்தனத்திற்கு மாறினால் நல்லது தான்.
ஏகாந்தத்தில் நாம் கேட்கும் குரல்கள் ,சமூகத்தில் இறங்கும் தோறும் தேய்ந்துமறைந்து விடுகிறது. சமூகம் பொதுவாக தன் ஒவ்வொரு உறுப்பினரின் தனித்துவத்திற்கும்எதிரானதாய் இருக்கிறது. சமூகம் ஒரு கூட்டு நிறுவனம், அதன் உறுப்பினர்களின்ஒப்புதலுக்கேற்ப, சுதந்திரத்தையும் ரசனையையும் உணவிற்கான உத்தரவாதத்திற்குபண்டமாற்றி விடுகிறது.அதன் தலைசிறந்த பண்பு அதன் மீதான உறுதிப்பாடுthath.தற்சார்பு என்பது ஒரு வெறுக்கத்தக்க பண்பாகும். அது உண்மையானபடைப்பாளிகளை விட பூசாரிகளுக்கும் சடங்குகளுக்குத் தான் முக்கியத்துவம் தரும்.
உண்மையான மனிதன் முன்முடிவுகளற்றவன். அவன் தன்கரங்களை நன்மையின் பெயரால் தடைபடுத்தாமல் அதனையும் ஆராய்வான். நேர்மையைத் தவிரவேறெதுவும் நிலைத்திருக்காது.உங்களுக்கே நேர்மையாக இருங்கள்,உங்களுக்கான இடத்தை அடைவீர்கள்.ஒருமுறைபழைய கிறிஸ்தவ கொள்கைகளைப் குறித்து பிரசங்கம் செய்ய முயன்ற நண்பருக்கு அளித்தபதிலை நினைவுகூர்கிறேன்.என்னை நம்பி வாழும் நான் இந்தப் புனிதக் கொள்கைகளை வைத்துஎன்ன செய்யப்போகிறேன் என்று நான் கூறியதற்கு அவர் அது தீமையில் இருந்து வருவது,நன்மையில் இருந்தல்ல என்றார். ’’நான் அவ்வாறு கருதவில்லை. ஒருக்கால் நான் தீமையின்குழந்தையென்றால் அவ்வாறே வாழ்கிறேன் என்றேன்.எனது தனித்தன்மையை விட வேறெந்த விதிகளும் புனிதமானதல்ல.இப்பொழுது நடைமுறையில்நன்மை, தீமை என்பது அவ்வப்பொழுது மாற்றி மாற்றி பயன்படுத்தப் படுகிற பெயர்களே தவிரவேறொன்றுமல்ல. என்னளவில் எனது உளச்சான்றிற்குஎது நன்மை என்று தோன்றுகிறதோ அதுதான் நப்மை. தீமை என்பதும் அவ்வாறே , என் மனத்திற்கு எதுதீமை என்று தோன்றுகிறதோ அதுதான் தீமை.எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஒருவன் தளராது தன்னைமுன்னிறுத்த வேண்டும், ஏனெனில் அந்த எதிர்ப்புகள் மின்னி மறைபவையே. பட்டங்களுக்கும் பதவிகளுக்கும், சமூகத்திற்கும் அமைப்புகளிற்கும் நாம் எளிதில் அடிமையாவது குறித்து சிந்தித்துப் பார்த்தால் அவமானமே மிஞ்சுகிறது. ஒவ்வொரு உண்மையாளனும்,சிந்தனையாளனும் இதையே சொல்கிறான். கடினமானதெனினும் நீங்கள் கருதுகின்ற உண்மையையே கூறுங்கள்.கொடூரமும் அகங்காரமும் தானத்தின் பெயரணிந்து வருகிறதென்றால் விட்டுவிடுவதா?
-தொடரும்